|
ரெயிலில் Sleeper berth -ல், பயணம் செய்வோருக்கு அடையாள அட்டை அவசியம்: Aug 21, 12 |
|
ரெயில்களில் தற்போது குளுகுளு வசதி செய்யப்பட்ட ஏ.சி. பெட்டிகளிலும், தட்கல் டிக்கெட்டுகளிலும் பயணம் செய்கிற பயணிகள் மட்டும் அடையாள அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும், டிக்கெட் பரிசோதகர் கேட்கிறபோது காட்ட வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது.
இந்த நிலையில், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணிப்பதற்கு முன்பதிவு செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கற்பனையான ஒருவர் பெயரில் முன்பதிவு செய்த டிக்கெட்டில் மற்றொருவர் பயணம் செய்கிற சம்பவங்களும் நடக்கின்றன. திடீர் விபத்துக்கள் நடக்கிறபோது, டிக்கெட் யார் பெயரில் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ, அவர் பாதிக்கப்பட்டவராக தகவல் வெளியாகி விடுகிறது. ஆனால் அந்த டிக்கெட்டில் அவர் பயணம் செய்யாமல் வேறொருவர் பயணம் செய்திருப்பார். இதனால் சட்டசிக்கல்கள் எழுகின்றன.
இந்த பிரச்சினைகளில் தூங்கும்வசதி கொண்ட பெட்டிகளில் (முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு) பயணம் செய்கிற அனைத்து பயணிகளும் பயணத்தின்போது அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற விதியை ரெயில்வே அமல்படுத்த முடிவு செய்துள்ளது. |
|
|
|
|
|