|
கீழச்சிவல்பட்டி மெட்ரிக். பள்ளியில் புதிய நூலகக் கட்டடம் திறப்பு விழா Dec 17, 09 |
|
சிவங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே, கீழச்சிவல்பட்டி மெட்ரிக் பள்ளியில் புதிய நூலகக் கட்டடத் திறப்புவிழா நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் உள்ள ஆர்.எம்.மெய்யப்பச் சட்டியார் மெட்ரிக் பள்ளியில் புதிய நூலகக் கட்டடம் மற்றும் தண்ணீர் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.
திருமயம் சட்டப் பேரவை உறுப்பினர் ராம.சுப்புராம் தலைமை வகித்தார். மாவட்ட சேர்மன் பாண்டியன் முன்னிலை வகித்தார். கே.ஆர்,வைரவன் நா.சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.
விழாவின் சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் கலந்து கொண்டு நூலகக் கட்டடத்தை திறந்து வைத்து நூலகத்தின் பயன்பாடுகள் குறித்துப் பேசியது:
நூலகம் என்பது ஓரு உலகத்துக்குச் சமமானது. பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் நூலகத்துக்கு வந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
எவ்வளவு விஷயங்களை நாம் கண்ணால் கண்டாலும், படித்து நம் மனதில் பதிந்த விஷயம் மட்டுமே வாழ்நாள் முழுதும் நம் நினைவில் நிற்கும். பேரறிஞர் அண்ணா இறக்கும் தருவாயில் கையில் புத்தகம் வைத்திருந்தார் என்றார்.
அபிமன்யு, ஊராட்சிமன்றத் தலைவர் வெள்ளையன் செட்டியார், நல்லம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளித் தாளாளர் எஸ்,எம்.பழனியப்பன், முதல்வர் ஜி.குணாளன் ஆகியோர் நன்றி கூறினர்
source : Dinamani 18/12/09 |
|
|
|
|
|