Nagaratharonline.com
 
காரைக்குடி, கழனிவாசல் சாலையோர மின் கம்பம் முறிவு: பஸ் விபத்து தவிர்ப்பு  Aug 23, 12
 
காரைக்குடி, கழனிவாசல் பகுதியில் சாலையோர மின் கம்பம் முறிந்ததால் பொதுமக்கள் மின் வாரியத்திற்குத் தகவல் கொடுத்தனர். அவ்வழியே வந்த தனியார் பஸ் முன்னெச்சரிக்கையால் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
கழனிவாசலிருந்து உ.சிறுவயல் சாலையின் தொடக்கத்தில் உள்ள கோவிலின் அருகே சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது செவ்வாய்க்கிழமை இரவில் அடையா ளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு சென்றுவிட்டது.
இதனால் மின் கம்பம் அடிப்பகுதி உடைந்து சாய்ந்த நிலையில் நின்றது. புதன்கிழமை மின் வாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. காரைக்குடி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் உத்தரவின் பேரில் பொறியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மின்சாரமும் நிறுத்தம் செய்யப்பட்டது.
அதேநேரத்தில் திருமயத்திலிருந்து உ. சிறுவயல் வழியாக காரைக்குடிக்கு வந்த தனியார் பஸ் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிறுத்தப்பட்டதால் பயணிகளுடன் வந்த பஸ் பெரும் விபத்திலிருந்து தப்பியது.