Nagaratharonline.com
 
திருச்சி - காரைக்குடி : தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே உறுதி  Aug 25, 12
 
;தீபாவளியை முன்னிட்டு திருச்சி - காரைக்குடி - மானாமதுரை வழியாக சென்னை முதல் ராமேஸ்வரம் வரையிலும், மறு மார்க்கத்தில் சிறப்பு ரயில்களை இயக்க கோரி, பொதுமக்கள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கை தொடர்பாக, அவர் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதினார்.அவர்கள் எழுதிய பதில் கடிதத்தில், ""தென்னக ரயில்வே, தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகளின் தேவைக்கேற்பவும், காத்திருப்போர் பட்டியலின் எண்ணிக்கையை பொறுத்தும், சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. திருச்சி - காரைக்குடி - மானாமதுரை வழியாக சென்னை முதல் ராமேஸ்வரம் வரையிலும், மறு மார்க்கத்தில் இயக்க கோரும் கோரிக்கைகளையும், கவனத்தில் கொண்டுள்ளப்படும்,'' என, பதிலளித்துள்ளனர்.