Nagaratharonline.com
 
ராணி மெய்யம்மை பிறந்தநாள் பரிசு: விண்ணப்பங்கள் வரவேற்பு  Aug 29, 12
 
ராணி லேடி மெய்யம்மை ஆச்சியின் பிறந்தநாள் பரிசுத் தொகை ரூ.2 லட்சம் பெற தகுதியான பெண் சேவகர்கள், சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெண் இனத்துக்கான சேவைப் பணிகளில் ஈடுபட்டு வரும் பெண் சேவகர்கள் அல்லது சேவை நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

பரிசு பெறத் தகுதியான சேவை நிறுவனங்கள், பெண்களுக்காக அவர்கள் ஆற்றி வரும் சேவைகள் குறித்த தகவல்களுடன் 2011-12-ம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை நகல் மற்றும் சேவை நிறுவனம் பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை "செயலாளர், ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை, ராணி சீதை மன்றம், 603, அண்ணா சாலை, சென்னை - 600 006' என்ற முகவரிக்கு செப்டம்பர் 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சேவகர் அல்லது சேவை நிறுவனத்துக்கு அக்டோபர் 11-ம் தேதி நடைபெறும் பிறந்தநாள் விழாவில் பரிசு வழங்கப்படும்.