|
செல்ல மறுக்கும் அரசு பஸ்கள் நாட்டரசன்கோட்டை மக்கள் அவதி Dec 20, 09 |
|
முடிக்கரை, ஒட்டாணம் செல்லும் அரசு பஸ்கள் நாட்டரசன் கோட்டைக் குள் செல்ல மறுப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
நாட்டரசன்கோட்டை, வாக்காத்துபட்டி, கண்டானிபட்டி, கவுரிபட்டி, கீழங்குளத்துப்பட்டி, திருவேலங்குடி, வாணியங்குடியிலிருந்து ஏராளமான மாணவர், அரசு ஊழியர் சிவகங்கை, காளையார்கோவில் செல்கின்றனர். சிவகங்கையில் இருந்து கண்டிப்பட்டி, முடிக்கரை, ஒட்டாணத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை கட்டாயம் நாட்டரசன்கோட்டைக் குள் வந்து செல்லவேண்டும்.
நிறுத்தம்: இதில் சிவகங்கை - கண்டிப்பட்டி பஸ் மட்டுமே காலை, மாலையில் இங்கு வருகின்றது. ஒரு பஸ் மட்டுமே வருவதால் பள்ளி, அலுவலகம் செல்வோர் அவதி அடைகின்றனர். அந்த வண்டியில் மாணவர்கள் படியில் தொங்கியபடி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. கண்ணுடைய நாயகி கோயிலுக்கு ஏராளாமான வெளியூர் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பஸ் இன்றி அவர்களும் பரிதவிக்கின்றனர்.
நாட்டரசன்கோட் டையை சேர்ந்த ராமு கூறுகையில், ""கூடுதல் பஸ்களை இயக்குமாறு போக்குவரத்து கழகத்திடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. சில டிரைவர்கள் ரோடு குறுகலாக இருப்பதால் வர சிரமமாக உள்ளது என்கின்றனர். மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்,'' என்றார்.
போக்குவரத்து கழக அலுவலர் ஒருவர் கூறுகையில், ""இந்த வழியில் செல்லும் பஸ்சில் போதிய வருமானம் இல்லை. இதனால் நாட்டரசன் கோட்டைக்குள் செல்வதில்லை. குறுகிய ரோடாக இருப்பதால் விபத்து நடக்கிறது. இதனால் ரோடை அகலப்படுத்தவேண்டும்,'' என்றார்.
source : dinamalar 21/12/09 |
|
|
|
|
|