|
நாளும் உயரும் டீசல் விலையால் வாழ்க்கையே போச்சு: Sep 14, 12 |
|
மத்திய அரசு டீசல் விலையை,லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியுள்ளது.ஏற்கனவே டீசல் விலை ரூ.44.31 பைசாவாக இருந்தது, தற்போது 50.39 பைசாவாக உயர்ந்துள்ளது. அரசு ஐந்து ரூபாய் உயர்த்தினாலும், தமிழக வரி, என ஆறு ரூபாய் வரை இடங்களுக்கு தகுந்தாற்போன்று கூடுகிறது. இதன் மூலம் லாரி, வேன், டாக்சி கட்டணங்கள் உயர்த்தப்படும்.
தமிழ்நாடு "ஆம்னி' பேருந்து உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாறன் கூறுகையில், ""டீசல் விலை உயர்வால், "ஆம்னி' பேருந்துகளில் பயணக் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க இயலாதது. குறிப்பாக, 350 கி.மீ.,க்கு குறைவான தூர பயணத்திற்கு 20 ரூபாய் வரையும், 350 கி.மீ.,க்கு மேல் பயணிப்போரின் பயணக்கட்டணம் 30 ரூபாய் வரையும் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வை இன்று முதல் செயல்படுத்துகிறோம்,''என்றார். |
|
|
|
|
|