|
காரைக்குடி காலேஜ் ரோட்டில் மரங்கள் இன்றி "வெறிச்" Oct 9, 12 |
|
காரைக்குடி காலேஜ் ரோடு பகுதியில், மரங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், பூஞ்சோலையாக இருந்த பகுதி,வெட்ட வெளியாக மாறி வருகிறது.காரைக்குடி காலேஜ்ரோடு பகுதியில், பல்கலை கழகம், பாலிடெக்னிக், சிக்ரி, இன்ஜினியரிங்கல்லூரி, உடற்கல்வியல் கல்லூரி, தொலை நிலை கல்வி இயக்ககம், மெட்ரிக்., பள்ளி, அரசு கல்லூரி, பெண்கள் கல்லூரி, என, ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன.வெளியூர், நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள், பொதுமக்கள் இவ்வழியாக செல்கின்றனர். கல்லூரி சாலைக்கு அழகே அதன் இருபுறமும் உள்ள மரங்கள் தான். இந்த மரங்கள், அழகப்ப செட்டியாரால், நடப்பட்டு பராமரிக்கப்பட்டவை.கண்டனூர் ரோட்டிலிருந்து, கல்லூரி சாலை முடிய, இருபுறமும் உள்ள மரங்களால், கல்லூரி சாலை எப்போதும், பூஞ்சோலையாக காட்சியளித்து வந்தது.
பெரும்பாலான மரங்கள், கஸ்குட்டா எனப்படும் ஒட்டுண்ணி தாவரத்தால், பாதிக்கப்பட்டு வாடின. இதையடுத்து, வாடிய மரங்கள் வேரோடு வெட்டப்பட்டன.வெட்டிய மரத்துக்கு பதில் மரங்கள், மாதங்கள் பல கடந்த பின்பும் இதுவரை வைக்கப்படவில்லை.அந்த இடங்கள் வெட்ட வெளியாக மாறி வருகிறது. கல்லூரிக்கு வருவோர் கையில் குடைபிடித்து வரவேண்டிய நிலை உள்ளது.
தொண்டு நிறுவனங்கள், இந்த பகுதியில் மரத்தை நட்டால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். பல்கலை நிர்வாகமும் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்,என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
source : Dinamalar |
|
|
|
|
|