|
அழகப்பா பல்கலை.யில் கணித மேதை ராமானுஜம் பிறந்தநாள் கருத்தரங்கு Dec 23, 09 |
|
காரைக்குடி, டிச. 23: காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் கணிதத்துறை சார்பில் கணித மேதை ராமானுஜம் பிறந்தநாள் விழாவையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது.
பல்கலை. துணைவேந்தர் ப. ராமசாமி தலைமை வகித்தார் அப்போது அவர் பேசியது பள்ளிக் கல்வி முறை மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்வதில்
அன்று சிறந்துவிளங்கியது. அதேபோன்று இப்போதும் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் திறமையைக் வெளிக்கொண்டு வரும் சாதனங்களாகத் திகழவேண்டும்.
அதன் மூலம் கணிதமேதை ராமானுஜரைப் போன்று சிறந்த ஆராய்ச்சியாளர்களை நாம் உருவாக்கவேண்டும் என்றார்.
பலக்லை. தனி அலுவலர் ம. செல்வம், மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் லெட்சுமிநாராயணன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரி பேராசிரியர் வேதமாணிக்கம்,
அழகப்பா அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் செல்லப்பா உள்ளிட்டோர் பேசினர்.
கருத்தரங்கில் அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தமிழக பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிóத்தனர். பல்கலை. கணிதத்துறைத் தலைவர் ஆர். நடராஜன் வரவேற்றார். பேராசிரியர் என். பழனியப்பன் நன்றி கூறினார்.
Source:Dinamani
Dec 23, 2009 |
|
|
|
|
|