Nagaratharonline.com
 
கவனிப்பார் யாரோ?  Oct 11, 12
 
சிவகங்கை மாவட்டத்தில் ரோடுகளின் அவலட்சணம்.

இதில் பல ஆண்டுகளாக, தார் போர்த்தாத ரோடுகள் அதிகம். இந்த ரோட்டில் தான் சர்வ அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளும் பயணிக்கின்றனர். ரோட்டில் மண் மேவி தூசி மண்டலமாக மாறுவதையோ, குண்டும் குழியுமாக இருப்பதையோ யாரும் கண்டுகொள்வதில்லை."நமக்கு என்ன வந்தது' என்ற மனப்போக்கில் செயல்படுகின்றனர். இதன் விளைவு விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. வாகனங்களை ஓரம்கட்டி விட்டு, நடந்து சென்றால் கூட பரவாயில்லை என்ற மனநிலைக்கு, மக்கள் வந்து விட்டனர். வாகனங்களில் சென்றால் முதுகு வலி, கழுத்து வலி என, சகல வலிகளும் தொற்றிக்கொண்டு விடும். அவ்வப்போது பராமரித்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது.

புதிதாக ரோடு போடவும் மனம் வரவில்லை.. அதிகாரிகள் இனியாவது கவனம் செலுத்துவார்களா?