|
கானாடுகாத்தான் செட்டிநாடு பங்களாவை பார்வையிட்ட மத்திய அமைச்சர் செல்ஜா Oct 13, 12 |
|
காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானில் செட்டிநாடு பங்களாவை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத் துறை அமைச்சர் குமாரி செல்ஜா வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
முன்னதாக, அவர் மதுரையில் இருந்து காரைக்குடிக்கு வந்தார். காரைக்குடி எம்.எஸ்.எம் பங்களாவுக்குச் சென்ற அவர், பின்னர் அங்கிருந்து காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் சென்றார்.
அங்கு செட்டிநாடு பாரம்பரிய சுற்றுலா வீடுகளில் ஒன்றான செட்டிநாடு பங்களாவை பார்வையிட்டார்.
கோட்டையூர் பகுதியில் தஞ்சை ஓவியர் நாகராஜன் படைத்துள்ள ஓவியங்களையும் அவர் பார்வையிட்டார்.
கடியாபட்டியில் உள்ள செட்டிநாடு வீடுகளை அமைச்சர் பார்வையிடச் சென்றதாகவும், இரவில் காரைக்குடியில் தங்கிவிட்டு சனிக்கிழமை காலை அவர் தஞ்சாவூர் செல்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். |
|
|
|
|
|