Nagaratharonline.com
 
நடராஜபுரம் ரோடு பணி முடக்கம்  Oct 22, 12
 
கல்லல் ஒன்றியம், நடராஜபுரம் - அய்யனார்குளம் - காளையார்கோவில் வரை, 4 கி.மீ., தூரத்திற்கு நபார்டு திட்டம் ரூ.75 லட்சத்தில் ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், நடராஜபுரம் விலக்கு முதல் ஒரு கி.மீ., தூரத்திற்கு வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை கடந்து ரோடு போடப்பட்டால், நடராஜபுரத்தில் இருந்து காளையார்கோவிலுக்கு 20 கி.மீ., தூரம் சுற்றிச்செல்லவேண்டிய சொக்கநாதபுரம், பாகனேரி, காடனேரி கிராம மக்கள், 12 கி.மீ., க்குள் சென்றுவிடலாம்.

இதனால், இந்த ரோட்டை எதிர்பார்த்து அப்பகுதி மக்கள், அரசு ஊழியர்கள்,மாணவர்கள் பயனடைவர். கல்லல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், கடந்த சில தினங்களுக்கு முன், ரோடு போடும் பணியை துவக்கியது. இந்நிலையில், வனத்துறைக்கு சொந்தமான ஒரு கி.மீ., தூர இடத்தில், ரோடு போட, அத்துறை அதிகாரிகள் தடைவிதித்தனர். இதனால், ரோடு போடும் பணி கிடப்பில் போடப்பட்டது. * ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறியதாவது, கல்லல் - காளையார்கோவிலை இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், ரோடு போட அனுமதிக்குமாறு, கலெக்டர் மூலம் முயற்சித்தோம். ஆனால், வனத்துறையினர் தடை செய்வதால், ரோடு பணிகளை செய்யமுடியவில்லை, என்றார்.