|
மகர் நோன்பு விழா Oct 24, 12 |
|
நவராத்திரி உற்சவத்தின், 10வது நாளான, விஜயதசமியான நேற்று, கோவில்களில் அம்பு போடும் வைபவம் கோலாகலமாக நடந்தது.
துர்க்கையாக அவதாரம் எடுத்த அம்மன், ஒன்பது நாட்கள் தொடர்ந்து கொலுவிருந்து, மகிஷாசுரமர்த்தன் என்ற அசுரனை வதம் செய்தாள். வெற்றியை கொண்டாடும் விதமாக, 10 நாளான நேற்று விஜயதசமி விழாவாக கொண்டாடப்பட்டது.
"விஜயதசமியன்று துவங்கும் காரியங்கள் ஜெயமாகும்' என்பதால், கல்வியை துவங்கும் குழந்தைகள், நெல்மணியில் "அ' என்ற தமிழ் முதலெழுத்தை பள்ளி, கோவில்களில் எழுதும் "வித்யாரம்பம்' நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அம்பு போடுதல்: விஜயதசமியன்று சைவ, வைணவ கோவில்களில் அம்பு போடும் வைபவம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
நேற்று சென்னை பவளக்கார தெருவில் உள்ள காரைக்குடி மற்றும் தேவகோட்டை நகர விடுதிகளில் மாலை 6 மணிக்கு செட்டி மகன் முருகனை நகரத்தார்கள் வழிபட்டு, அருள்பெற்று, பிறகு அம்பு போட்டனர் |
|
|
|
|
|