|
படுக்கை வசதி ரயில் பயணிகளுக்கும் டிசம்பர்,1ம் தேதி முதல் அடையாள அட்டை கட்டாயம் Nov 2, 12 |
|
ரயிலில், படுக்கை வசதிகொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிப்பவர்கள், புகைப்பட அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும். இது, வரும் டிசம்பர், 1ம் தேதி முதல் கட்டாயமாகிறது. ம
ரயிலில், "ஏசி' வகுப்பு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள்,தங்கள் அடையாளத்தை நிரூபிக்க, அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும் என்பது ஏற்கனவே அமலில் உள்ளது. முகவர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதில் முறைகேடு நடப்பதாகவும், போலியான பெயர்களில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளில், பயணிப்பதை தடுக்கும் வகையில், இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது.தற்போது, இது, படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணிக்கும், முன்பதிவு டிக்கெட்தாரரகளுக்கும் நீடிக்கப்படுகிறது. தங்கள் பெயரில்தான் டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க, அடையாள அட்டையை கண்டிப்பாக உடன் எடுத்து செல்ல வேண்டும். இது, டிசம்பர்,1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. |
|
|
|
|
|