|
மதுரை - சென்னை பஸ் கட்டணம் ரூ.1,200:கட்டண கொள்ளையி்ல் சுற்றுலா பஸ்கள் Nov 7, 12 |
|
தமிழகம் முழுவதும் இயக்கப்படும், மாநில அரசின் அனுமதி பெற்றுள்ள, 616 ஆம்னி பஸ்கள், தேசிய அனுமதியுடன், தமிழகத்தில் இயக்கப்படும், 159 ஆம்னி பஸ்கள் என, 775 ஆம்னி பஸ்கள் மட்டுமே, தமிழகத்தில் இயக்கப்பட வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, 1,350 ஆம்னி பஸ்கள் இயங்குகின்றன. .ஆம்னி பஸ்களுக்கான அனுமதி, மூன்று மாதம், அதாவது, காலாண்டு என்ற வகையில், ஒரு பயணியின் சீட்டுக்கு, 5,000 ரூபாய் கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டும். அதுவே, சுற்றுலா பஸ்கள் எனில், அந்த அளவுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் இல்லை. சென்னை, மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதாக, வட்டார போக்குவரத்துக் கழக அலுவலகத்தில், அனுமதி பெற்றால் போதுமானது.
இதை சாதகமாக பயன் படுத்திக் கொண்டு, நவ.,13, 14 ஆகிய தேதிகளில், மதுரையில் இருந்து சென்னைக்கு, 1,200 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்து, டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. சேலத்தில் இருந்து, சென்னைக்கு, 900 ரூபாயாகவும், கோவையில் இருந்து, சென்னைக்கு, 1,100 ரூபாயாக நிர்ணயித்து, டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
source : Dinamalar |
|
|
|
|
|