Nagaratharonline.com
 
அரசு பஸ்களில் முன்பதிவு: ஒரே நாளில் ரூ.1 கோடியைத் தொட்டது  Nov 10, 12
 
தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளில் ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் கடைசி நேரத்தில் பஸ்களை நாடி வருகின்றனர்.

சனிக்கிழமை சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு செல்வதற்காக அரசு பஸ்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவுத் தொகையின் மதிப்பு ரூ. 1 கோடி. இதுவரை இந்த அளவு முன்பதிவு செய்யப்பட்டதில்லை. இதுவே முதல் முறை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.