|
கோவிலூரில் நாளை தொல்காப்பியர் காலக் கருத்தரங்கு Dec 26, 09 |
|
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் கோவிலூர் மடாலயம் ஆகியவற்றின் சார்பில் தொல்காப்பியர் காலக் கருத்தரங்கு சனிக்கிழமை (டிச.26) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து கருóதரங்கக அமைப்பாளர் பேராசிரியர் ஆறு.அழகப்பன், கோவிலூர் மடாலய மேலாண்மையாளர் மெ.மெ.மெய்யப்பன் ஆகியோர் கூறியது:
தமிழ்ச்செம் மொழி இலக்கியங்களில் முதன்மையானது தொல்காப்பியம். காலத்தால் முற்பட்டது. திருவள்ளுவர் காலம், தமிழ்ப்புத்தாண்டு ஆகியவற்றை அறிஞர்கள் ஆராய்ந்து கண்டதைத் தமிழகஅரசு ஏற்றுக்கொண்டு அவற்றைமக்களுக்கு அறிவித்தது.
ஆனால் தொல்காப்பியரின் காலம் இதுவரை இறுதியான உறுதி செய்யப்படாமல் உள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவிருக்கும் இவ்வேளையில் தொல்காப்பியர்காலம் முடிவு செய்யப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.
தொடக்கவிழாவில், கோவிலூர் ஆதீனம் நாச்சியப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமை வகித்து தொல்காப்பியர் படத்தைத்திறந்து வைக்கிறார். கருத்தரங்க திட்ட அறிமுக உரையை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் க. ராமசாமி நிகழ்த்துகிறார்.
முனைவர் ஆறு. அழகப்பன் தொல்காப்பியர் கால ஆய்வுகள் எனும் நூலை அறிமுகம் செய்து பேசுகிறார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நூலை வெளியிட்டு பேசுகிறார்.
டிச. 26, 27 தேதிகளில் கருத்தரங்க அமர்வுகள் நடைபெறும். தஞ்சை தமிழ்ப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் இ. சுந்தரராமசாமி முதன்மை ஆய்வுக்கட்டு ரையை வாசிக்கிறார்.
நான்கு கருத்தரங்க அமர்வுகளிலும் இளங்குமரன், ப. அரங் கசாமி, வெற்றியழகன், தமிழண்ணல் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். 50 அறிஞர்கள் அமர்வுகளில் பங்கேற் கிறார்கள். கருத்தரங்க அமர்வுகளில் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்துப்பதிபிக்கும் பொறுப்பை பேராசிரியர் தெ. சொக்கலிங்கம் ஏற்றுள்ளார்.
நிறைவு விழாவில், அழகப்பா பல்கலை. துணைவேந்தர் ப. ராமசாமி, முனைவர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
source : Dinamani 26/12/09 |
|
|
|
|
|