|
மதகுபட்டி அரசு பள்ளியை தரம் உயர்த்த வலியுறுத்தல் Nov 16, 12 |
|
மதகுபட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.ஒன்றிய தொடக்கப்பள்ளி,அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மட்டும் உள்ளது.
பள்ளிப்படிப்பு நடுநிலைப்படிப்புடன் முடிந்து விடுவதால் இப்பகுதியை சேர்ந்தவர்கள் மேல்படிப்புக்காக அலையவேண்டியுள்ளது.
இப்பகுதி விவசாயத்தை மட்டும் நம்பியுள்ளதால் குழந்தைகளை வெளியூரில் படிக்க வைக்க வசதியில்லாமல் உள்ளனர்.இங்குள்ள மாணவர்கள் 8 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க வேண்டுமானால் ஒக்கூர்,அலவாக்கோட்டை,பாகனேரி செல்ல வேண்டும்.போதிய வசதியில்லாத நிலையில்,இங்குள்ள அரசுப்பள்ளியை படிப்படியாக மேல்நிலைப்பள்ளிவரை தரம் உயர்த்த பள்ளி கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர் |
|
|
|
|
|