Nagaratharonline.com
 
எவ்வளவு நேரம் தான் மின்தடை செய்கிறீர்கள்?: தமிழக அரசு முழு அறிக்கை வெளியிட ஹைகோர்ட் உத்தரவு  Nov 27, 12
 
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் தினமும் எத்தனை மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது என்பது குறித்த விரிவான அறிக்கையை சமர்பிக்குமாறு தமிழ்நாடு மின்வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
மாநிலத்தின் பல மாவட்டங்களில் தினமும் சில மணி நேரத்துக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதாகவும், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் எத்தனை மணி நேரத்துக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்பது பற்றிய விரிவான அறிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் நேரங்கள் பற்றிய தகவலை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு முன்னதாகவே தெரியப்படுத்தாதது ஏன் என்பது பற்றியும் மின்சார வாரியம் தனது அறிக்கையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
மேலும் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.