|
காசோலை மோசடி வழக்கில் ஒருவருக்கு 2 ஆண்டு சிறை Dec 2, 12 |
|
காரைக்குடியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவர், சென்னையில் தேங்காய் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். அப் போது அவரது கடையின் அருகே புத்தகக்கடை நடத்தி வந்த வள்ளியப்பன் கடந்த 2006-ஆம் ஆண்டில் ரூ. 3.40 லட்சம் கடன்பெற்றாராம். பின்னர் 2007-ம் ஆண்டில் கடன் கொடுத்த கணேசமூர்த்தி இறந்துவிட்டார்.
கணேச மூர்த்தியின் மனைவி இந்திரா அந்தப் பணத்தை திருப்பிக்கேட்டபோது வள்ளி யப்பன் பணத்திற்கான சென்னை வங்கியொன்றின் காசோலையை வழங்கினாராம். அந்தக் காசோலையை காரைக்குடியில் உள்ள வங்கியொன்றில் செலுத்தியபோது வள்ளியப்பன் கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது.
இதுகுறித்து காரைக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்திரா வழக்குத்தொடர்ந்தார். இவ்வழக்கு கடந்த ஆக. 17-ல் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையில், காசோலை மோசடி செய்த வள்ளியப்பனுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நீதிபதி சரசு ராஜ் தீர்ப்பளித்தார். |
|
|
|
|
|