|
பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமிக்க கோரிக்கை Dec 7, 12 |
|
பொன்னமராவதி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்டத் துணைச் செயலர் ஏ.எல். ராசு, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
பொன்னமராவதி வட்டார ஏழை, எளிய மக்களுக்காக உள்ள பாப்பாயி அரசு மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 6 மருத்துவர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது, ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார். எனவே, உடனடியாக மகப்பேறு பெண் மருத்துவர் ஒருவரையும், 5 மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும். பொன்னமராவதி அண்ணா சாலையின் இருபுறமும் வடிகால் வசதி வேண்டும். மழைக் காலங்களில் சாலையின் மழைநீர் செல்வதால் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
கொப்பனாபட்டியிலிருந்து பொன்னமராவதி, தொட்டியம்பட்டி, ஏனாதி, வேந்தன்பட்டி, திருக்களம்பூர் சாலையையும், கொப்பனாபட்டியிலிருந்து மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, பிரான்மலை வழியாக மதுரை செல்லும் சாலையையும் சீரமைக்க வேண்டும்
Source:Dinamani |
|
|
|
|
|