|
போக்குவரத்து நெரிசலில் திணறும் திருப்பத்தூர் Dec 7, 12 |
|
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், கல்லல், சிவகங்கை போன்ற ஊர்களுக்கு திருப்பத்தூர் வழியாக வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை அதிகம். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பாதசாரிகளும் சைக்கிளில் செல்வோரும் சிரமப்படுகின்றனர்.
பலமுறை போக்குவரத்து மாற்றம், ஒருவழிப்பாதை, நோ பார்க்கிங் நடைமுறைப்படுத்தினாலும், நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. மாற்று வழி ஏற்படுத்துவதன் மூலமே போக்குவரத்து நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பேரூராட்சி ரோடுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை விரிவுபடுத்தவும். பேருந்து நிறுத்தம் அருகில் யூனியன் இடத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்தவும்.
தஞ்சாவூர், மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் உத்தேசிக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை நடைமுறைப்படுத்தவும். நகரினுள் முக்கிய சாலைகளை இணைக்கும் ரவுண்ட் ரோடு அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் இப்பிரச்சணைகளுக்கு தீர்வு காண முடியும்
Source:Dinamani |
|
|
|
|
|