|
கொன்னைப்பட்டி: ஆபத்தான மின் கம்பங்களை அகற்றக் கோரிக்கை Dec 27, 09 |
|
பொன்னமராவதி, டிச. 26: பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பிரதான சாலையோரத்தில், கொன்னைப்பட்டி பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள மின் கம்பங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
எனவே, இந்த மின் கம்பங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: Dinamani Dec 27,2009 |
|
|
|
|
|