|
விபத்தில் இறந்த, ஒக்கூர் இந்தியன் வங்கி மேலாளர் உடலுறுப்புகள் தானம் Dec 12, 12 |
|
ஒக்கூர் அருகே நடந்த விபத்தில், இறந்த இந்தியன் வங்கி கிளை மேலாளரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
காளிதாஸ்,58. இந்தியன் வங்கி, ஒக்கூர் கிளை மேலாளராக பணிபுரிந்தார். சிவகங்கை செந்தமிழ் நகரில் வசித்தார்.
டிச.,5 ல் பணி முடிந்து, மாலையில் டூவீலரில் தன்னுடன் பணியாற்றும், நகை மதிப்பீட்டாளர் சுந்தராஜனுடன் வீடு திரும்பினார்.
இலந்தங்குடிபட்டி அருகே ரோட்டில் உள்ள பள்ளத்தில், நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.இதில், காயமடைந்து மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சிகிச்சை பலனின்றி காளிதாஸ் நேற்று இறந்தார். அவரது உடல் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, அவரது இரு கண் உட்பட உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. |
|
|
|
|
|