Nagaratharonline.com
 
கல்லல் : கூரையில்லாத பிளாட்பாரம் - வெயிலில் காயும் பயணிகள்  Dec 13, 12
 
கல்லல் ரயில்வே ஸ்டேசனில் இரண்டாவது பிளாட்பாரத்தில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. கல்லல் ஸ்டேசனில் திருச்சி-மானாமதுரை,சென்னை-ராமேஸ்வரம்,மானாமதுரை-மன்னார்குடி உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. காலை 9.20 மணிக்கு கல்லலில் மானாமதுரை- திருச்சி,திருச்சி-மானாமதுரை செல்லும் ரயில்கள் ஒரே நேரங்களில் வரும் போது திருச்சி செல்லும் பயணிகள் நிற்கும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்படாததால் பயணிகள் வெயிலில் காத்திருக்கவேண்டியுள்ளது.

நிழலுக்காக முதல் பிளாட்பாரத்தில் நின்று கொண்டு ரயில் வரும்போது இரண்டாவது பிளாட்பாரத்திற்கு சிலர் செல்ல முயற்சிக்கும் போது விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. இரண்டாவது பிளாட்பாரத்தில் மேற்கூரை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.