Nagaratharonline.com
 
குடிநீர் இணைப்பில் 'மெகா' ஊழல் பேரூராட்சி ஊழியர் சஸ்பெண்ட்  Dec 27, 09
 
சிவகங்கை மாவட்டம் புதுவயல் பேரூராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில், 16 லட்ச ரூபாய் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இங்கு உலக வங்கி நிதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இணைப்பிற்கு தலா 4,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதன்படி 1,044 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 644 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. கணக்கில் காட்டாமல் 400 க்கும் மேற்பட்ட இணைப்பு உள்ளதாக புகார் எழுந்தது.
மேலும் குடிநீர் வினியோகத்திற்கான 17 மின் மோட்டாரை பழுது பார்த்ததாக போலி ரசீது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சில கவுன்சிலர்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினர். விசாரணை நடத்த பேரூராட்சிகள் உதவி இயக்குனருக்கு உத்தரவிட்டப்பட்டது. இதில் கணக்கில் காட்டாமல் இணைப்பு வழங்கி 16 லட்ச ரூபாய் வரை மோசடி நடந்தது தெரியவந்தது. முறைகேடு செய்த பில் கலெக்டர் ரவி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
உதவி இயக்குனர் தெய்வநாயகம் கேட்டபோது: ஊழல் குறித்து விசாரணை நடக்கிறது. வேறு ஒன்றும் தெரியாது, என்றார்.
பேரூராட்சி தலைவர் முருகனிடம் கேட்டபோது:கடந்த 10 ஆண்டுகளாக ஊழல் நடந்துள்ளது. ரவி என்ற ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்

source : Dinamalar 28/12/09