Nagaratharonline.com
 
NEWS REPORT: Arvindh Natarajan - Receipent of Karmaveer Puraskaar-Kids 4 Change Award  Dec 13, 12
 
ஈகையும் சமூகத்தொண்டும் நகரத்தார்களின் இரத்தத்தில் ஊறிய பண்புகளாகும்.அந்தக்காலம் தொட்டே நகரத்தார்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை இறைப்பணி க்காகவும் தர்ம காரியங்களுக்காகவும் செலவு செய்து வந்துள்ளார்கள். தற்போதைய இளை ஞர்களிடமும் இந்த பண்புகள் தொடர்ந்து வருவது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரீமான்ட் நகரில் வசித்துவரும் அரிமளத்தை சேர்ந்த திரு பழனியப்பன் உமா தம்பதியினரின் அரு ந் தவப்புதல்வன் செல்வன் அர் விந்திற்கும் இத்தகைய குணங்கள் சிறு வயது முதலே இருப்பது பாராட்டத்தக்கது.

அறியாமை முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் , கிராமங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவேண்டும் என்பது அர்விந்தின் (15) குறிக்கோள்.தரமான கல்வி இளைஞர்களுக்கு அளித்தால் தான் வளமான எதிர்காலத்தை உருவாக்கமுடியும் என்ற உன்னத கொள்கையை இலக்காக கொண்டு தனது 11 வயதிலேயே புதுவயலில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியருக்கு ஆங்கிலப் பாடம் சொல்லிகொடுத்து வந்துள்ளார். கடந்த 2011 ம் ஆண்டு முதல் ஸ்ரீ சரஸ்வதி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்காவில் இருந்து ஆன்லைன் மூலம் ஆங்கிலம் படிக்க கற்றுக்கொடுத்துள்ளார். இந்த பள்ளியில் அதற்கான வசதி இல்லாததால் இவரே ஒரு லாப நோக்கு இல்லா அமைப்பினை (AN CHARITABLE FOUNDATION-a non profit organisation) தொடங்கி அதன் மூலம் இப்பள்ளிக்கு Computer with accessories and Internet connection அனைத்தையும் அன்பளிப்பாக வழங்கி உள்ளார்.

இவரது தன்னலமற்ற சேவையை பாராட்டி 2012 நவம்பர் 26ம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் இயங்கி வரும் iCONGO அமைப்பு இவருக்கு Karmaveer Puraskaar-Kids 4 Change Award (Global Award for Social Justice) என்ற விருதினை வழங்கி கௌரவித்தது. டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி திரு குரேஷி I.A.S.அவர்களுக்கும் ஒலிம்பிக் வீராங்கனை மேரி கோம்ப் அவர்களுக்கும் மற்றும் பல பிரபலங்களுக்கும் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது அந்த மேடையில் அர்விந்த் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது என்றால் மிகையாகாது.

இந்த விருது பற்றி அர்விந்த் கூறியது

Learn to read when you are young
So you can read to learn when you are older.

பெரும் பொருள் கொடுத்து உதவ வேண்டும் என்பதில்லை சிறிய மெழுகுவர்த்தி இருளை முற்றிலுமாக நீக்குவது போல சிறிய அளவில் தன்னால் இயன்றதை செய்தால் போதும்


மேலும் தர்ம ஸ்தாபனகளுக்கு நிதி கொடுப்பதால் மட்டும் அது தகுதியானவர்களுக்கு முற்றிலுமாக போய் சேருகிறதா என்பது தெரியாத நிலையில் தானே முன்னின்று சமூகத்திற்கு தொண்டாற்றவேண்டும் என்ற இவரது கூற்று பாராட்டப்படவேண்டியதாகும்.
தனது நண்பர்களுடன் சேர்ந்து மேலும் பல பள்ளிகளுக்கு இது போன்ற செயல்களை செய்ய திட்டமிட்டுஇருப்பதாக இவர் கூறுவது வரவேற்கத்தக்கது.

இவரது தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துவோம்.

Sent by Meyyappan.CT from Puduvayal