Nagaratharonline.com
 
பார்த்தசாரதி கோயில் சொர்க்க வாசல் 24-ல் திறப்பு  Dec 17, 12
 
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரும் 24-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு சிறப்பு தரிசனத்துடன் இலவச தரிசன முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயிலின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் பெரிய எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு நேரடியாக சொர்க்க வாசல் பூஜைகள் ஒளிபரப்பப்படும்.

பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக துளசி, குங்குமத்துடன் லட்டு தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.