Nagaratharonline.com
 
பழனி பாதயாத்திரை சென்ற பக்தர் பஸ் மோதி சாவு  Dec 20, 12
 
பழனிக்குப் பாதயாத்திரை சென்ற பக்தர் மீது தனியார் பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தார்.

தேனப்பன் மகன் தியாகராஜன்(26). இவர் பழனிக்கு பாதயாத்திரையாக வியாழக்கிழமை அதிகாலையில் புறப்பட்டார்.

அவர் பரவை அருகே நடந்துசென்றபோது மதுரையிலிருந்து திண்டுக்கல் சென்ற தனியார் பஸ் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

கூடல்புதூர் போலீஸôர் பஸ் ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.