Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூரில் இன்று சொர்க்கவாசல் திறப்பு  Dec 27, 09
 
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று இரவு 11 மணிக்கு மேல் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
காலை 10 மணிக்கு சயன திருக்கோலத்தில் பெருமாள் காட்சி அளிப்பார். இரவு 7 மணிக்கு பெருமாள் ராஜாங்க அலங்காரத்தில் எழுந்தருள்வார். அபிஷேக, ஆராதனை நடக்கும். இன்று இரவு 10 மணிக்கு மேல் தங்கப்பல்லக்கில் சீதேவி பூதேவியுடன் பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருவர். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்புத்தூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்

source : Dinamalar 28/12/09