|
தாயுடன் சென்ற கல்லூரி மாணவியிடம் நகை பறிப்பு Dec 25, 12 |
|
கோட்டையூரை சேர்ந்தவர் அழகப்பன். இவரது மனைவி நாகரத்தினம். இவர் கல்லலில் உள்ள பாங்கி ஒன்றில் மானேஜராக வேலைபார்த்து வருகிறார். இவர்களது மகள் விசாலாட்சி (வயது18). இவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.டெக் படித்து வருகிறார்.
விடுமுறையில் விசாலாட்சி சொந்த ஊர் வந்து இருந்தார். நேற்று மாலை நாகரத்தினம், விசாலாட்சி ஆகியோர் காரைக்குடிக்கு பொருட்கள் வாங்க சென்றனர். பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு ஸ்கூட்டியில் தாயும், மகளும் ஊர் திரும்பினர்.
கல்லூரி சாலையில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று விசாலாட்சி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
இது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. |
|
|
|
|
|