Nagaratharonline.com
 
குன்றக்குடி குகைக் கோயில்கள்:சிந்துவெளி எழுத்துக்கள், சமணர் படுகைகள்  Dec 25, 12
 
தமிழகத்தின் பல இடங்களில் குடவரைக் கோயில்களைப் காணலாம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில். திருக்கோளக்குடி, குன்றக்குடி, பிரான்மலை, அரளிப்பாறை, மகிபாலன்பட்டி... என்று வரிசையாக பல குடவரைக் கோயில்கள் உள்ளன. இதில் குன்றக்குடி குகைக் கோயில்கள் வரலாற்று சிறப்புமிக்கது. இங்குள்ள கல்வெட்டில் சிந்துசமவெளி எழுத்துக்களின் எச்சமாகக் 'தமிழி' எனப்படும் கி.மு.3 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் எழுத்துக்கள் கல்வெட்டுக்களாக உள்ளன.

குன்றக்குடி இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றுமலைக்கோயில்; மற்றொன்று கீழக்கோயில். அனைவருக்கும் தெரிந்தது மலைக்கோயில் மட்டும் தான். இது மருதுபாண்டியர்களால் கட்டப்பட்டது. கீழக்கோயிலில் சுந்தரேஸ்வரர், அண்ணாமலையார், மலைக் கொழுந்து நாதர், சண்டேஸ்வரர் ஆகிய நான்கு குடவரைக் கோயில்கள் உள்ளன. இவை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

மலைக் கொழுந்து நாதர் கோயிலில் மட்டும் 13 புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. வண்ண வேலைப்பாடுடைய புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன.சுமார் 350 ஆண்டு பழமையான, அழகிய தூண்கள் நிறைந்த முன் மண்டபம் இக்கோயில்களுக்கு அழகு சேர்க்கிறது