Nagaratharonline.com
 
NEWS REPORT: நகரத்தார் நற்பணி மன்றம் – சென்னை–பிள்ளையார் நோன்பு விழா  Dec 28, 12
 
 
 
சென்னை -41, பாலவாக்கம், 3/621, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நகரத்தார் நற்பணி மன்றம் – சென்னை, 18/12/2012 அன்று மாலை திருவான்மியூர், மருந்தீஸ்வரர் ஆலயம் அருகில் உள்ள அமரபாரதி கல்யாண மண்டபத்தில் -2 ம் ஆண்டு பிள்ளையார் நோன்பு விழாவை சிறப்பாக கொண்டாடியது.

திருவான்மியூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வசிக்கும் நகரத்தார்கள், தங்கள் குடும்பத்துடன் விழாவில் கலந்து கொண்டு, விநாயகரை வழிபட்டு. இழை எடுத்து, இறை அருள் பெற்றனர்.

மன்ற உறுப்பினர்களில் முதியவர்களான திரு. காசி ஸ்ரீ சாத்தப்பன் அவர்களும் (ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு பாதயாத்திரையாக சென்றவர்) பேராசிரியர். திரு. AL..குமரப்பன் அவர்களும் முனைவர் மெ .ஸ்ரீனிவாசன் அவர்களும் இழைகளை எடுத்துக்கொடுத்தனர்.
மங்கலப் பொருட்களை ஏலம் விட்டபிறகு, மன்ற உறுப்பினர்களின் உபசரிப்பில் இரவு விருந்து வழங்கப்பட்டது. நிறைவாக , செயலாளர் AR.சுப்பிரமணியன் நன்றி கூற, பிள்ளையார் நோன்பு விழா இனிது நிறைவேறியது .