|
கணியன் பூங்குன்றனார் நினைவு மண்டபம் மகிபாலன்பட்டியில் உயர்நிலைக் குழு ஆய்வு Dec 27, 09 |
|
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டியில் சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவு மண்டபம் மற்றும் சிலை அமைக்க, அரசு நியமித்த உயர்நிலைக் குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
திருப்பத்தூரிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் மகிபாலன்பட்டி உள்ளது.
சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் இங்கு வாழ்ந்தவர் என்பதால், அவருக்கு நினைவு மண்டபம் மற்றும் சிலை அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து செய்தி - மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையில் உயர்நிலைக் குழுவினர் மகிபாலன்பட்டியில் ஆய்வு செய்தனர்.
குடவரைக் கோயில் அமைந்துள்ள பகுதியைப் பார்வையிட்டு, அதில் உள்ள மலைக்குன்றில் நினைவு மண்டபம் அமைப்பது குறித்து விவாதித்தனர்.
பின்னர் குன்றக்குடி மடத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் அப்துல் ரஹ்மான், இளையான்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மதியரசன், மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குனர் சி.காமராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் எழிலரசு, சிற்பக் கலை கல்லூரி முதல்வர் குணசேகரன், தமிழண்ணல் பா.நமச்சிவாயம், பேராசிரியர் பழநி, அய்க்கண் புலவர் குருசாமி, முத்தப்பன், டாக்டர் நோயல், மணி, தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நினைவு மண்டபம், சிலை வடிவம் பற்றிய தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
நிறைவாகப் பேசிய அமைச்சர், அறிஞர் பெருமக்களின் கருததுக்கள் பதிவு செயயப்பட்டுள்ளது.
முதல்வரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதன் பின் இறுதி வடிவம் கொடுக்கப்படும் என்றார்.
source : Dinamani 28/12/09 |
|
|
|
|
|