Nagaratharonline.com
 
ராமாயணம்தான் இந்தியாவின் முகம்: கவிஞர் அரு.சோமசுந்தரன்  Jan 5, 13
 
ராமாயணம்தான் இந்தியாவின் முகம் எனப் பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன் தெரிவித்தார்.

தேவகோட்டையில் நடைபெற்ற ராமாயண விழாவில் அவர் மேலும் பேசியது:

ராமன்தான் இந்தியாவின் அடையாளம். ராமன் நேபாளம் முதல் இலங்கை வரை நடந்ததால் மொத்த இந்தியாவே புண்ணிய பூமியாகக் கருதப்படுகிறது.

கம்பராமாயணம் நமக்கு வேதம். காசிக்கு மிஞ்சிய பகுதி இல்லை. கங்கைக்கு மிஞ்சிய நதி இல்லை. காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை. கம்பனுக்கு மிஞ்சிய புலவர் இல்லை. ஆகவே கம்பராமாயணத்தை தொடர்ந்து படிப்போம் என்றார்.

முன்னதாக பேராசிரியர் சுப்பையா வரவேற்றார். பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் கண.சிறசபேசன் துவக்க உரையாற்றினார். பேராசிரியர் தேவநா.வெங்கடாச்சலம், பாலசுந்தரம், கார்மேகம் ஆகியோர் ராமாயாணம் குறித்துப் பேசினர்.