|
நெற்குப்பை அருகே பலாத்கார வழக்கில் இருவர் கைது Jan 11, 13 |
|
நெற்குப்பை அருகே ஒழுகமங்கலம் கிராமத்தில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக இருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஒழுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் வியாழக்கிழமை மாலை பாண்டி கண்மாய் அருகில் உள்ள தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த போது, அதே ஊரைச்சேர்ந்த ஜெயக்கொடி மகன் செல்வம் (22), சின்னையா மகன் அருண்குமார் (20) இருவரும் அப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த பெண் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த நெற்குப்பை போலீசார் இருவரையும் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி முத்துக்குமார் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். |
|
|
|
|
|