Nagaratharonline.com
 
இன்று (15/01/2013) திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா  Jan 14, 13
 
திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் அன்று திருவூடல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

4 மாட வீதிகளிலும் சாமி வீதி உலா நடைபெறும். திருவூடல் நிகழ்ச்சியை முன்னிட்டு சாமிக்கும், அம்மனுக்கும் ஊடல் ஏற்பட்டு, அம்மன் பெரிய கோவில் நோக்கியும், அண்ணாமலையார் குமரக்கோவில் நோக்கியும் செல்வார்கள்.

மாட்டு பொங்கல் அன்று தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எந்த நந்திக்கும் விழா நடத்தப்படுவது இல்லை. திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவிலில் மட்டும் தான் நந்திக்கு காய்–கனிகள் மற்றும் இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

திருவூடல் நிகழ்ச்சி நடந்த மறுநாளான 16–ந் தேதி (புதன்கிழமமை) அண்ணா மலையார் திருவண்ணாமலை மலையில் கிரிவலம் செல்கிறார்.