Nagaratharonline.com
 
பழமையான தேவகோட்டை காவடிகள் : ஜன., 20 ல் புறப்பாடு  Jan 17, 13
 
தைப்பூச திருவிழாவிற்காக, தேவகோட்டை நகரத்தார் காவடிகள், ஜன., 20 ல், பழநிக்கு புறப்படுகின்றன.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, 400 ஆண்டுகளாக, தேவகோட்டையில் இருந்து பழநிக்கு, நகரத்தார் காவடி தூக்கி, பாதயாத்திரையாக பழநி செல்வர்.

ஜன., 27 ல், தைப்பூச விழா நடக்கிறது. இதில் பங்கேற்க ஜன., 20 காலை, தேவகோட்டையில் இருந்து காவடி புறப்படுகிறது. ஜன., 18 ல், நகர பள்ளிக்கூடத்தில் முருகன் சன்னதியில் காவடி கட்டப்பட்டு பூஜை நடக்கும். மறுநாள் நகர்வலம் வந்து, விநாயகர் கோயிலில் தங்குவர். மறுநாள் காவடிகள் புறப்படும்.
அன்று மாலை, தேவகோட்டை காவடிகள் குன்றக்குடி சென்றடையும். பிற பகுதி நகரத்தாரின் காவடிகளும், குன்றக்குடியில் கூடும். ஜன., 21 ல், பழமையான "ரத்தின வேல்' எடுத்து, காவடிகள் பழநி புறப்படும்

Source:Dinamalar