|
நாட்டரசன்கோட்டையில் "நாட்டுக்கோட்டை பொங்கல்' Jan 22, 13 |
|
சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில், நாட்டுக்கோட்டை நகரத்தாரின் பாரம்பரிய "செவ்வாய் பொங்கல்' விழா நடந்தது. பொங்கல் பண்டிகையை அடுத்து வரும் செவ்வாய் கிழமையில், நாட்டரசன்கோட்டை நகரத்தார், இவ்விழாவை கொண்டாடுகின்றனர். குடும்பம் வாரியாக (புள்ளிகள்) வரி வசூலித்து, குலுக்குச் சீட்டு மூலம் ஒருவரை தேர்வு செய்வர். அவரது குடும்பத்தினர், முதல் பொங்கல் வைப்பர்.
இதன்படி நேற்று, கோட்டை கருப்பையா குடும்பத்தினர் முதல் பொங்கல் வைக்க, நகரத்தார் மரியாதை செய்தனர். பின், 895 குடும்பத்தினரும் வரிசையாக பொங்கல் வைத்தனர். கண்ணுடைய நாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பிரான்ஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
வரன் தேடும் படலம்: நகரத்தார் பணி, தொழில் காரணமாக வெளிநாட்டில் வசித்தாலும், "செவ்வாய் பொங்கல்' அன்று, இங்கு ஒன்று கூடுவர். விழாவில், வரன் தேடும் படலமும் நடக்கும்.
Source:Dinamalar |
|
|
|
|
|