Nagaratharonline.com
 
கானாடுகாத்தான் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சம்ப்ரோஷணம்  Jan 28, 13
 
கானாடுகாத்தானில் அருள்மிகு வெங்கடேசப் பெருமாள், பத்மாவதித் தாயார் கோயில் சம்ப்ரோஷணம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.27) காலை 9.15 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடைபெற உள்ளது.

கானாடுகாத்தான் நகரத்தார்கள் முயற்சியால், இக்கோயிலில் சுமார் ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. KM. CT.நாராயணன் செட்டியார் தலைமையில் திருப்பணிக் குழுவினர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள், பத்மாவதித் தாயார், குருவாயூரப்பன், பள்ளிகொண்ட பெருமாள், ஐயப்பன், விஷ்வக் சேனர், பட்டாபிஷேக ராமர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், லெட்சுமி ஹயக்ரீவர், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சந்நிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கும்பாபிஷேக விழாவையொட்டி புதன்கிழமை முதல் யாக சாலை பூஜைகள் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு மேல் 11 மணிக்குள் மகா சம்ப்ரோஷணம் நடைபெறுகிறது.

விழாவையொட்டி, வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் திருப்பணிக் குழுத் தலைவர் நாராயணன் செட்டியார் தலைமை வகித்தார்.

கிருஷ்ணன் தூது எனும் தலைப்பில் கவிஞர் அரு.சோமசுந்தரம் பேசுகையில், தீய சக்திகளை அழிப்பதற்கு யுகங்கள் தோறும் அவதரிப்பேன் என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறினார்.

துரியோதனன் வாழ்ந்த தலைநகர் அஸ்தினாபுரம் என்பது இன்றைய நம் தலைநகர் தில்லியே ஆகும்.

ஸ்ரீ கிருஷ்ணர் காலத்தில் அங்கு துச்சாதனன் துகிலுரித்தான். இப்பொழுது அது அங்கு தொடர்கிறது. கிருஷ்ணர் விரைவில் அவதாரம் ஆவார் என்றார்.