Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் புத்தாண்டு வழிபாடு  Dec 29, 09
 
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.




ஜன.,1 ம் தேதி சந்திரகிரகணம் முடிந்து, அதிகாலை 3 மணிக்கு திருவனந்தாள் நடக்கும். காலை 4 மணிக்கு தரிசனத்திற்காக நடை திறக்கப்படும். காலை 5.30 மணிக்கு திருவாதிரையை முன்னிட்டு, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். அதை தொடர்ந்து கோ பூஜை, தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு நடராஜர் திருவீதி புறப்பாடு, பிற்பகல் 1.30 மணிக்கு உச்சி காலம், இரவு 8.30 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடக்கும். அன்று காலை முதல் இரவு வரை சிறப்பு தரிசனம் நடக்கிறது. கற்பக விநாயகர் தங்க கவசத்தில் காட்சி அளிப்பார். தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் எழுந்தருள்வார். கோயில் நிர்வாக அறங்காவலர்கள் அரு.அருணாசலம், நா.சிதம்பரம் கூறியதாவது: பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய பந்தல் அமைத்துள்ளோம். மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது, என்றனர்.

source ; dinamalar 30/12/09