|
மேலைச்சிவபுரியில் மருத்துவ முகாம் Feb 22, 13 |
|
மேலைச்சிவபுரியில் தமிழக அரசின் சிறப்பு பொது மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற முகாமை, திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.கே. வைரமுத்து தொடக்கி வைத்துப் பேசினார்.
முகாமில் 900 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 72 பேருக்கு ஸ்கேனும், 50 பேருக்கு இருதய பரிசோதனையும் செய்யப்பட்டது. 16 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். |
|
|
|
|
|