Nagaratharonline.com
 
பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத சோழீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு பயிற்சி முகாம்  Feb 24, 13
 
பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத சோழீஸ்வரர் கோவிலில் மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் கரு.ராஜேந்திரன் கோவிலின் தெற்குச்சுவரில் உள்ள கல்வெட்டை படி எடுத்து மாணவர்களுக்கு வாசித்துக் காட்டினார். இக்கல்வெட்டின்படி இக்கோவில் கிபி 11-ஆம் நூற்றாண்டில் (1080) கட்டப்பட்டது என்றும், முதலாம் ராஜேந்திரன் மகள் வயிற்றுப்பேரன் முதலாம் குலோத்துங்கனுக்கு இயற்பெயர் ராஜேந்திரன் என்பதாகும். அவர் காலத்தில் நிஜதராஜன் என்ற குறுநில மன்னர்கள் இப்பகுதியை ஆளுகின்றனர். அவ்வழியில் வந்த ராஜேந்திர சோழ கேரள நிஜதராஜன் என்ற மன்னன் இக்கோவிலை கட்டி ராஜேந்திர சோழீஸ்வரம் என்று பெயர் வைத்தான். மேலும் மடப்புறத்திற்கும் நிலக்கொடை அளித்துள்ளான் என்பது இக்கல்வெட்டின் மூலம் தெரிகிறது என விளக்கினார்.