|
NEWS REPORT: திருவொற்றியூர் மாசி மக பூஜை: Photos Feb 25, 13 |
|
|
|
|
|
|
|
சென்னை, பிப்.22: சென்னை திருவொற்றியூர் மாசிமக பூஜை புதன்கிழமை (பிப். 24)தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.
மாசிமக பூஜையை முன்னிட்டு சென்னை மண்ணடி, பவழக்காரத் தெருவில் அமைந்துள்ள புது தண்டாயுதபாணி டிரஸ்ட், பழைய தண்டாயுதபாணி டிரஸ்ட் சார்பில் நகரவிடுதிகளில் இருந்து தண்டாயுதபாணி சுவாமி வெள்ளி, மரத்தேர்களில் திருவொற்றியூருக்கு வீதி உலா செல்கிறார். அப்போது ஆயிரக்கணக்கான நகரத்தார்கள் மற்றும் பக்தர்கள் பாதயாத்திரையாகச் செல்கின்றனர்.
புதன்கிழமை காலை 9-15 மணிக்கு பவழக்காரத் தெருவில் இருந்து புறப்பட்டு திருவொற்றியூருக்கு எழுந்தருளல். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மகேஸ்வர பூஜை. சனிக்கிழமை மகிழடி சேவை, ஞாயிற்றுக்கிழமை மகேஸ்வர பூஜை முடித்து மாலை 3 மணிக்கு திருவொற்றியூரில் இருந்து வெள்ளி, மரத் தேர்களில் தண்டாயுதபாணி சுவாமி புறப்பட்டு தியாகராஜப் பெருமான் ஆலயப் பிரதட்க்ஷணமாக மண்ணடியில் உள்ள பழைய, புது நகரவிடுதிகளுக்கு வந்துசேருகிறார்.
இதற்கான விரிவான ஏற்பாடுகளை புது தண்டாயுதபாணி டிரஸ்ட் மற்றும் பழைய தண்டாயுதபாணி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Article Source:Dinamani
Photo Source: Magesh.MR |
|
|
|
|
|