|
திருக்கோஷ்டியூர் தெப்ப தரிசனம் : நெரிசலால் பக்தர்கள் திணறல் Feb 27, 13 |
|
இந்த ஆண்டு தெப்பம் நடைபெற்ற நேற்று முன்தினம்,மகம் நட்சத்திரமும், மாசி பவுர்ணமியும் முழுமையாக இருந்ததால் பக்தர்களின் வருகை 10ம் திருநாளன்று அதிகமாக காணப்பட்டது.
சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதிகாலை முதல் வெளியூர் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தாலும், போக்குவரத்து சீராக காணப்பட்டது.
நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு திருப்புத்தூரிலிருந்து கார்,வேன்,பஸ்களில் ஏராளமானோர் வந்தனர். இதனால் காட்டாம்பூரிலிருந்து தெப்பக்குளம் வரை வாகனங்கள் செல்ல முடியாமல் நின்று விட்டன. சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பலர் இறங்கி பல கி.மீ.,தூரம் நடந்தே தெப்பத்திற்கும்,வீடுகளுக்கும் சென்றனர். |
|
|
|
|
|