Nagaratharonline.com
 
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பார்வையாளர்களுக்கு 4 மாதம் தடை  Feb 27, 13
 
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை வளாகத்திற்கு பார்வையாளர்கள் சென்று பார்வையிடுவதற்கு, நான்கு மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு, ரசாயன பூச்சு பூசும் பணி, மார்ச், 1ம் தேதியிலிருந்து, ஜூன், 30ம் தேதி வரை நடக்கிறது. இதனால், திருவள்ளுவர் சிலை வளாகத்துக்கு சென்று பார்வையிடுவதற்கு, பார்வையாளர்களுக்கு, 4 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.