|
கல்லல்–மதகுபட்டி சாலையில் குறுகிய பாலத்தால் அடிக்கடி விபத்து Feb 27, 13 |
|
கல்லல்–மதகுபட்டி சாலையில் நற்கனி அம்மன் கோவில் ஆர்ச் அருகே மூன்று கண் பாலம் உள்ளது. இந்தப் பாலம் மிகக் குறுகிய வளைவில் அமைந்துள்ளதால் இந்தப் பாலத்தைக் கடக்க முயலும் இரு சக்கர நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி விடுகின்றன. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த பலர் நிலை தடுமாறி விழுந்துள்ளனர். சிலர் இறந்தும் உள்ளனர். இது இந்த இடத்தில் அடிக்கடி நடந்து வருகிறது.
மேலும் இந்தச் சாலை தற்சமயம் 7 மீட்டர் அகல முள்ளதாக இருக்கிறது. அதனை 12 மீட்டர் அகலமாக மாற்றியமைக்க வேண்டும். மேலும் பாலத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். |
|
|
|
|
|