Nagaratharonline.com
 
காரைக்குடிக்கு அறிவிக்கப்பட்ட புதிய ரயில்களை விரைவில் இயக்க வலியுறுத்தல்  Mar 8, 13
 
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்லவன் விரைவு ரயில் காரைக்குடி வரை நீட்டிப்பு, காரைக்குடி-சென்னை, கோவை-ராமேஸ்வரம் வராந்திர ரயில்களையும், மானாமதுரை-விருதுநகர் நீட்டிப்புக்கான ரயில்கள் அனைத்தும் வரும் கோடை கால பருவ மான ஏப்ரல், மே மாதங்களில் விடுமுறையில் மாணவர்கள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் இயக்கவேண்டும்.

இதில் தாமதமானால் விரைவில் அனைத்துத்தரப்பு மக்களும், தொண்டு நிறுவனங் களும் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்று காரைக்குடி ரயில் பயணிகள் பாதுகாப்பு கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.