Nagaratharonline.com
 
NEWS REPORT: பட்ஜெட் 2013 எதிரொலி: சொத்து வாங்கினால், விற்றால் என்ன பாதிப்பு ஏற்படும்?  Mar 8, 13
 
2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் இனி ரூ. 50 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை விற்கையில் 1 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று அறிவித்தார். அதாவது நீங்கள் ரூ. 50 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள நிலமோ, வீடோ விற்றால் 1 சதவீத வரி கட்ட வேண்டும். இது ஒரு பாதிப்பு ஆகும். ஆனால் விவசாய நிலத்தை விற்கையில் இந்த 1 சதவீத வரி செலுத்தத் தேவையில்லை.

வீட்டுக் கடன் மீதான வரி விலக்கு ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது தான் இன்னொரு பாதிப்பு. இது நல்ல விஷம் தானே அதில் பாதிப்பு என்னவென்று நினைக்கலாம்.
நீங்கள் முதல் முறையாக வீடு வாங்கும் போது அதுவும் ரூ.25 லட்சத்திற்கு வீட்டுக் கடன் வாங்கினால் மட்டுமே நீங்கள் செலுத்தும் வட்டியில் ரூ. 1 லட்சம் கூடுதலாக வரி விலக்கு பெற முடியும். வரி விலக்கு பெற வேண்டும் என்றால் அந்த வீட்டில் நீங்கள் குடியிருக்க வேண்டும். வாடகைக்கு விட்டால் வரி விலக்கு பெற முடியாது.

வீட்டுக் கடன் வாங்குகையில் வட்டி தவிர்த்து முதல் தொகையில் ரூ. 1 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது