|
கல்லலில் மருத்துவ வசதி கிடைக்காமல் மக்கள் அவதி Mar 20, 13 |
|
கல்லலில் அரசு மருத்துவமனை இல்லாமல் மக்கள் மருத்துவ வசதிக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கல்லலில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய மருத்துவமனை செயல்பட்டது. அதில் பணிபுரிந்த டாக்டர் ஓய்வு பெற்ற பின்னர் மருத்துவமனை பூட்டப்பட்டது. அன்றிலிருந்து இதுவரை இப்பகுதி மக்கள் மருத்துவ வசதிக்காக வெளியூருக்கு செல்ல வேண்டியுள்ளது. இப்பொழுது நர்ஸ் மட்டும் உள்ள துணை சுகாதார நிலையம் உள்ளது.மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் செம்பனூர், காரைக்குடி, திருப்பத்தூருக்கு அலைய வேண்டியுள்ளது. பொதுமக்கள், மாணவர்கள் பயன்படும் வகையில் 24 மணி நேரமும் செல்படும் விதத்தில் மருத்துவமனை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். |
|
|
|
|
|